பாராட்டு விழா
சிவகாசி: சிவகாசி மிராக்கிள் நீட் பயிற்சி அகாடமியில் படித்து அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அகாடமி நிர்வாக இயக்குனர் கிஷோர் வரவேற்றார். டாக்டர்கள் ராமநாதன், மணிகண்டன் அகாடமியில் படித்து அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். அகாடமி நிர்வாக இயக்குனர் ஜனனி நன்றி கூறினார்.