மாணவர்களுக்கு பாராட்டு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஒயிட் பீல்ட் நர்சரி மற்றும் பிரைமரி துவக்கப்பள்ளி மாணவர்கள் 24 பேர், கிருஷ்ணன் கோயில் லிங்கா குளோபல் பள்ளியில் நடந்த தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களையும், சாம்பியன்ஷிப் பட்டமும் பெற்றனர். சாதனை மாணவர்களை தாளாளர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் சுமதி, முதல்வர் வனிதா, ஆசிரியர்கள் பாராட்டினார்.