உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

 தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

விருதுநகர்: கலெக்டர் செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம், விருதுநகர் அரசு ஐ.டி.ஐ.,ல் டிச. 8ல் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. இதில் அரசு, முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். பிட்டர், மெக்கானிக், எம்.எம்.வி., ஆர்.ஏ.சி., எலெக்ட்ரீஷியன், டர்னர், வெல்டர், வயர் மேன், சர்வேயர், கோபா உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களும், பயிற்சி பெறாதவர்களும், 8 முதல் பிளஸ் டூ வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இம்முகாமில் பங்கேற்கலாம். இப்பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7700 முதல் ரூ.13 ஆயிரத்து 500 வரை வழங்கப் படும். மத்திய அரசின் தொழிற் பழகுநர் சான்று, முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை