உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீர் பிடிப்பு ஆக்கிரமிப்புகளை மழை காலத்திற்கு முன் அகற்றுங்கள் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

நீர் பிடிப்பு ஆக்கிரமிப்புகளை மழை காலத்திற்கு முன் அகற்றுங்கள் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மழை காலத்திற்குள் அகற்றுங்கள் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் பழனிச்சாமி, துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பாலசுப்பிரமணியன், (மார்க்சிஸ்ட்) : நகரில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மழை காலத்திற்குள் அகற்றுங்கள். எனது 16 வது வார்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுமையாக முடிக்காமல் விட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர். டுவிங்கிளின் ஞான பிரபா, (தி.முக.,): கலைஞர் நகரில் தெருக்களில் போடப்பட்ட சிறு பாலங்கள் உடைந்து விட்டது. அதை சரி செய்யுங்கள். ரயில்வே பீடர் ரோட்டில் மின்விளக்குகள் பழுதாகி உள்ளது. ஜெயகவிதா, (தி.மு.க) : தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது கவுன்சிலர்களுக்கு சொல்லி விட்டு அதன் பின் எடுங்கள். மீனாட்சி, (தி.மு.க) : லீலாவதி நகரில் ரோடு அமைக்க வேண்டும். தனலட்சுமி, (தி.மு.க) : 1 வது வார்டில் மெயின் ரோட்டில் உள்ள பாலம் சேதமடைந்து விட்டது. மக்கள் நடக்க சிரமப்படுகின்றனர் அதை சரி செய்ய வேண்டும். தமிழ்காந்தன், (தி.மு.க.,): நகரில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்துள்ளீர்கள். கமிஷனர் : நகரில் பிரதான வாறுகால் தூர் வாரப்பட்டுள்ளது. மேலும் பிரச்சனையாக உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு சரி செய்யும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ