உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலங்கலாக வரும் நகராட்சி குடிநீர் அருப்புக்கோட்டை மக்கள் அவதி

கலங்கலாக வரும் நகராட்சி குடிநீர் அருப்புக்கோட்டை மக்கள் அவதி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி குடிநீர் கலங்கலாக வருவதால் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியில் உள்ளனர்.அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் வைகை ,தாமிரபரணி திட்டங்களிலிருந்து குடிநீர் விநியோகம் நடக்கிறது. 3 நாட்களுக்கு ஒரு முறை 36 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. வேலாயுதபுரம், நெசவாளர் காலனி, அன்பு நகர் பகுதிகளில் 10 நாட்களாக குடிநீர் கலங்கலாக வருகிறது. குடிநீரை பிடித்து சில மணி நேரங்கள் தெளிய வைத்தாலும் கலங்கலாகவே இருப்பதாக பெண்கள் கூறுகின்றனர்.குடிநீர் வந்தும் பயன் இல்லை, சமைக்கவும், புழக்கத்திற்கும் பயன்படுத்த முடியாமல் உள்ளதாக கூறுகின்றனர்.மழை காலமாக இருப்பதால் குடிநீரை சுட வைத்தாலும் கலங்கல் மாறுவது இல்லை. நகராட்சி நிர்வாகம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ