உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தடகள விளையாட்டு போட்டி

தடகள விளையாட்டு போட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் 12 லது விளையாட்டு போட்டி நடந்தது. பள்ளி தலைவர் டாக்டர் அறிவழகி தலைமை வகித்தார். முதல்வர் அல்கா சர்மா வரவேற்றார். இயக்குனர்கள் சசி ஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம் போட்டிகளை துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் கருப்பசாமி ஆண்டறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். தன்னம்பிக்கை பேச்சாளர் வேல்ராஜ் பேசினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் நாச்சியார், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ