உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கான தடகள போட்டிகள்

பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கான தடகள போட்டிகள்

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் 14 முதல் 19 வயது உட்பட்ட மாணவர்களுக்கான மாவட்ட தடகள போட்டிகள் நடந்தது.பி.எஸ்.ஆர்.. பொறியியல் கல்லுாரி தாளாளர் சோலைசாமி, இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி வரவேற்றனர். சங்கரன்கோவில் டி.எஸ்.பி.. அறிவழகன், மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் குமார மணிமாறன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாகிர் உசேன் துவக்கி வைத்தனர். 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், ராஜபாளையம் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ராமர், நவநீதகிருஷ்ணன், ஆறுமுகம், ராஜா, பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியர்கள், கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள் சுந்தரமூர்த்தி, அசோக்குமார் பானு சந்திரா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை