உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலீசார் மீது தாக்குதல்; தனிப்படை அமைப்பு

போலீசார் மீது தாக்குதல்; தனிப்படை அமைப்பு

ராஜபாளையம் ; ராஜபாளையம் வடக்கு போலீசாரை சிலர் தாக்கிய வழக்கில் இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.ராஜபாளையம் வடக்கு ஆவரம்பட்டி பாரதியார் தெரு குடியிருப்பு பகுதியில் பிரச்னை தொடர்பாக ராஜபாளையம் வடக்கு போலீஸ் தலைமை காவலர்கள் இசக்கி, ராம்குமார் பிரச்னையில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு கூறினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு போலீஸ் வைத்திருந்த லத்தி கம்பை பிடுங்கி தாக்கியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த நிலையில் சரவண கார்த்திக் 33, முத்துராஜ் 34, இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மூவரை பிடிக்க எஸ்.ஐ.,க்கள் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை