உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஹிந்து மதம், பக்தியை அழிக்க முயற்சி: தி.மு.க., மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு தி.மு.க., மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

ஹிந்து மதம், பக்தியை அழிக்க முயற்சி: தி.மு.க., மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு தி.மு.க., மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

விருதுநகர்:'ஆட்சியில் இருப்பவர்கள் எந்த கோயிலும் இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். ஹிந்து மதம், பக்தியை அழிக்கும் எண்ணத்தில் இருக்கின்றனர்,' என விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் மாரியம்மன் கோயில் ஊராட்சி எல்லையில் உள்ளது. ஆனால் 1995ல் நத்தம்பட்டியைச் சேர்ந்த சர்வேயர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலை நத்தம்பட்டியில் சேர்த்துவிட்டார். இந்த விவகாரம் இருக்கன்குடி மக்களுக்கு தெரிந்த பின் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கலெக்டர் உடனடியாக களஆய்வு செய்ய உத்தரவிட்டு 20 ஆண்டுகள் ஆகியும் களஆய்வு செய்யப்படவில்லை. இருக்கன்குடி ஊராட்சி அனுமதியின்றி கோயிலில் ரூ.130 கோடியில் கட்டுமானப்பணிகள் நடக்கிறது. ஒட்டு மொத்தமாக கோயிலை நத்தம்பட்டிக்கு அபகரித்து கொண்டு போகும் முறைகேடுகளை கண்டும் காணாமல் ஹிந்து சமய அறநிலையத்துறை இருக்கிறது. இந்த விவகாரத்தில் கோயில் எல்லையை உயர் நீதிமன்றத்தின் உத்தரப்படி மறுவரையறை செய்து இருக்கன்குடி ஊராட்சிக்குள் மாரியம்மன் கோயில் சர்வேயை ஒரு மாதத்திற்குள் கலெக்டர் சேர்க்க வேண்டும். தவறினால் அனைத்து சமூகத்தினருக்கும் அழைப்பு கொடுத்து போராட்டம் நடத்தப்படும். ஆட்சியில் இருப்பவர்கள் எந்த கோயிலும் இருக்கக்கூடாது என நினைக்கின்றனர். ஹிந்து மதம், பக்தியை அழிக்கும் எண்ணத்தில் இருக்கின்றனர். மக்கள் நம்பிக்கையை தகர்க்க வேண்டும் என்பதே ஆட்சியில் இருப்பவர்களின் நோக்கம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி