சாமிநத்தத்தில் மறியல் செய்ய முயற்சி: 15 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சாமிநத்தத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்ற பெண்கள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.சிவகாசி மாநகராட்சியுடன் சாமிநத்தம் ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஊர் மக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டு மக்கள் ரோடு மறியலுக்கு வருவதை தடுத்தனர். மேலும் மறியல் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுரேஷ்குமார், தேவா, பாலசுப்பிரமணியன் மற்றும் பெண்கள் உட்பட 15 பேரை மல்லி போலீசார் கைது செய்தனர்.