தீக்குளிக்க முயற்சி
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் பாறையாக இருப்பதால் மாற்றித்தரக்கோரி பூங்கொடி என்பவர் தீக்குளிக்க முயன்றார். ஸ்ரீவில்லிப்புத்துார் அருகே மொட்டமலை பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருக்கு அரசு இலவச வீட்டுமனை வழங்கிய நிலத்தில் பாறையாக உள்ளதாகவும், வேறு இடத்தை மாற்றி வழங்க வேண்டும் என ஆக. 11ல் கலெக்டரிடம் மனு அளித்ததால் மாற்று இடம் வழங்க கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார். நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் முகாமிற்கு வந்த பூங்கொடி மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.