உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடி கோயிலில் மங்கலப் பொருட்கள்

இருக்கன்குடி கோயிலில் மங்கலப் பொருட்கள்

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கும் துவக்க விழா நேற்று நடந்தது.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 2025 --26 ஆண்டிற்கான ஆடி மாத வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுமங்கலி பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி நேற்று மாலையில் ஹிந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் இளங்கோவன்,கோயில் பரம்பரை பூசாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, பரம்பரை அறங்காவலர்கள் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் பையில் ரவிக்கை துணி, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, மாரியம்மன் படம் வைத்து மங்கலப் பொருட்கள் வழங்கினர். அம்மனை தரிசிக்க வந்த பெண்கள் பலர் மங்கள பொருட்களை வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி