உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மினி பஸ் முன் ஆட்டோ டிரைவர்கள் மறியல்

மினி பஸ் முன் ஆட்டோ டிரைவர்கள் மறியல்

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமர்ந்து மினி பஸ் முன்பு ஆட்டோ டிரைவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து தாலுகா அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், நீதிமன்றம், மல்லி வழியாக முத்துலிங்காபுரத்திற்கு ஒரு மினி பஸ் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இயக்கப்பட்டது. இந்த பஸ் ரயில்வே ஸ்டேஷன் வந்து செல்வதால் ஆட்டோ தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பெர்மிட் இல்லாத நேரத்திலும் மினி பஸ் வந்து செல்ல ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று காலை ரயில்வே பீடர் ரோட்டில் வந்த மினி பஸ் முன்பு ஆட்டோ டிரைவர்கள் மறித்து தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெர்மிட் நேரத்தில் மட்டும் மினி பஸ் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரும் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ