உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டையில் அடிக்கடி குழாய் உடைப்பால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் சிக்கல்

அருப்புக்கோட்டையில் அடிக்கடி குழாய் உடைப்பால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் சிக்கல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் வைகை தாமிரபரணி, புதிய தாமிரபரணி திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 3 நாட்களுக்கு 1 முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.புதிய தாமிரபரணி திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், நகரின் பல பகுதிகளில் குடிநீர் பகிர்மான குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. ஒரு சில பகுதிகளில் வாறுகாலின் அருகே செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் கலக்க வாய்ப்பு உள்ளது. பூக்கடை பஜார், எஸ்.பி.கே., பள்ளி ரோடு பகுதிகளில் வாறுகால் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யும் பணி நடக்கிறது. நகரில் பகிர்மான குழாய்களில் ஏற்படும் உடைப்பை முற்றிலும் சரி செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை