விழிப்புணர்வு முகாம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. விருதுநகர் மாவட்டம் முழுவதும் 45 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம் நடந்து வருகிறது. அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம், கோபாலபுரம், செட்டிகுறிச்சி, சிதம்பராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்பட்டது.இதற்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் தலைமை வகித்தார். இதில் புதிய ரகங்கள், விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாய சாகுபடி, மண்வள அட்டை மூலம் பயிர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள், சமச்சீர் உர மேலாண்மை, மத்திய மாநில அரசு திட்டங்கள் உள்ளிட்டவை விளக்கப்பட்டது.