உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் மின்னணு தொடர்பியல் துறை , தமிழக அரசின் தொழில்துறை பாதுகாப்பு, சுகாதார பயிற்சி மையம் சார்பில் பட்டாசு தொழிலாளர்களுக்கான மேம்பட்ட பாதுகாப்பு , பயிற்சி என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆதரவுடன் நடந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஷ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மின்னணுவியல் துறை தலைவர் வளர்மதி வரவேற்றார். டீன் மாரிசாமி வாழ்த்தினார். தொழில் துறை பாதுகாப்பு, சுகாதார பயிற்சி மையம் இணை இயக்குனர் குமரேசன் பேசினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் மின்னணுவியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை