உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராஜபாளையம் : ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பயனாளர் சங்கம், ரயில்வே பாதுகாப்பு படை, பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் என்.சி.சி மாணவர்கள் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரயில் பயணங்கள் சங்க தலைவர் சுகந்தம் ராமகிருஷ்ணன் வரவேற்றார். மதுரை ரயில்வே கோட்ட மூத்த வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ் யு.டி.எஸ் செயலியை பயன்படுத்தி முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுத்தல் குறித்து விளக்கம் அளித்தார். ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சங்கரன் ரயில் பாதையை கடக்கும் போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ரயில்வே வணிகப்பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பு படை அதிகாரிகள் ரயில் பயணங்கள் சங்க நிர்வாகிகள் பி.ஏ.சி.ஆர் பாலிடெக்னிக் என்.சி.சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி