உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விருதுநகர்: விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., திட்டம், மாவட்ட பொது சுகாதாரம், சமூகநலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் இணைந்து நடத்திய இளம் வயது திருணம், இளம் வயது கருவுறுதல்குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.ஸ்ரீவித்யா கல்வி குழும தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ் தலைமை வகித்தார். துணை முதல்வர் பசுபதி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கணேசன், கன்னிச்சேரிபுதுார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரென்சி, மாவட்ட குழந்தைகள் உதவி மைய வழக்கு பணியாளர் சாரதா தேவி, சமூகநலத்துறையை சேர்ந்த ஜோஸ்மின், வளர் இளம் பெண்கள் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதய சங்கரி பேசினர். இளம் வயது திருமணம் தவிர்த்தல், பெண்களை பாதுகாக்கும் சட்டம், போக்சோ குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை