மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் தின ஊர்வலம்
06-Jun-2025
திருச்சுழி: திருச்சுழி அருகே மண்டபசாலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம், கருத்தரங்கம் நடந்தது.பிரதான் இன்டஸ் இன்ட் பேங்க் , மாவட்ட வளர்ச்சி திட்டம் இணைந்து ஊர்வலம் நடத்தின. திருச்சுழி, சிவகாசி உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் 40 இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், வளர் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தவிர்த்தல், வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தல் உள்ளிட்ட உறுதி மொழிகள் எடுக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊராட்சி செயலர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையில் அலுவலர்கள் செய்தனர்.___
06-Jun-2025