உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு பயிற்சி

விழிப்புணர்வு பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்துார், செப்.6- விருதுநகர் மாவட்ட பள்ளி கல்வித்துறை, சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றுத் துறை சார்பில், காலநிலை கல்வி முன்னெடுப்பு ஆசிரியர்களுக்கு மூன்று நாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடந்தது. விழாவை முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். துணைவேந்தர் நாராயணன், உதவி வன அலுவலர் ஞானப்பழம், இடைநிலை துவக்க கல்வி மாவட்ட அலுவலர்கள் பங்கேற்று பேசினர். பசுமைத் தோழர் ஹரிஷ் குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இளையராஜா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி