உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி.,யில் குறையும் பால்கோவா விற்பனை

ஸ்ரீவி.,யில் குறையும் பால்கோவா விற்பனை

ஸ்ரீவில்லிபுத்துார்: சபரிமலை சீசன் முடிந்து ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வெளிமாவட்ட ஐயப்ப பக்தர்கள் வருகையில்லாததால் பால்கோவா விற்பனை குறைவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.கடந்த கார்த்திகை மாதம் முதல் மண்டல பூஜை வழிபாட்டிற்கும்,மகர விளக்கு தரிசனத்திற்கும் சபரிமலைக்கு பயணித்த தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடக மாநில பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் வந்து ஆண்டாளை தரிசித்துவிட்டு பால்கோவா வாங்கி சென்றனர்.இதனால் வழக்கத்தை விட ஒரு மடங்கு பால்கோவா விற்பனை அனைத்து கடைகளுக்கும் ஏற்பட்டது. தேரடி பஜார் வீதிகளில் உள்ள அனைத்து பால்கோவா கடைகளிலும் விற்பனை களை கட்டியது. அதிகளவு வாகனங்களின் வருகையால் தேரடியில் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.தற்போது மண்டல பூஜைகளும், மகர விளக்கு தரிசனமும் முடிவடைந்துள்ளதால் வெளி மாநில பக்தர்கள்வருகை நேற்று முதல் குறைய துவங்கியுள்ளது. இருந்த போதிலும் பொங்கல் பண்டிகை முடிந்து தாங்கள் வேலை பார்க்கும் நகரங்களுக்கு செல்லும் மக்கள் மட்டுமே பால்கோவா வாங்கி செல்வதை காண முடிந்தது. கடந்த 60 நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த பால்கோவா விற்பனை தற்போது குறைய துவங்கியுள்ளதால் ஸ்ரீவில்லிபுத்துார் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ