மேலும் செய்திகள்
கரூர் வட்டார பகுதிகளில் பனங்கிழங்கு விற்பனை
26-Nov-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் பனங்கிழங்கு சீசன் துவங்கியுள்ளதால், அதனை வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகரில் திருவண்ணாமலை, செண்பகத் தோப்பு, மம்சாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார தோப்புகளில் ஆண்டுதோறும் பனங்கிழங்குகள் விளைச்சல் ஏற்படுவது வழக்கம். இதனை பனை விவசாயிகள் மண்ணில் இருந்து தோண்டி எடுத்து சுத்தம் செய்து சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். மார்கழி மாதம் துவங்கும் பனங்கிழங்கு விற்பனை மாசி, பங்குனி மாதம் வரை நடக்கும். மனிதர்களின் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிடுவது பழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரில் பனங்கிழங்கு விளைச்சல் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக விற்பனைக்கு வர துவங்கியுள்ளது. பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பல்வேறு பஜார் வீதிகளில் வியாபாரிகள் 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100 முதல் 200 வரை விற்கின்றனர். தற்போது வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள் ஆர்வத்துடன் பனங்கிழங்குகளை வாங்கி செல்கின்றனர். வியாபாரி கோவிந்தராஜ் கூறுகையில், தற்போது பனங்கிழங்கு விற்பனை துவங்கியுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் விற்பனை மந்தமாக இருந்தாலும் அரையாண்டு விடுமுறை நாட்கள் துவங்கிய நாள் முதல் படிப்படியாக விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
26-Nov-2025