உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் போக்குவரத்து இடையூறாக பேரி கார்டுgள்: நெரிசலில் விழி பிதுங்குவதோடு விபத்திற்கும் வாய்ப்பு

சிவகாசியில் போக்குவரத்து இடையூறாக பேரி கார்டுgள்: நெரிசலில் விழி பிதுங்குவதோடு விபத்திற்கும் வாய்ப்பு

சிவகாசி,: சிவகாசி தலைமை தபால் நிலையம் ரோடு, அம்பேத்கர் மணி மண்டபத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் குறுகிய ரோட்டின் நடுவில் பேரிகார்டு வைத்திருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கு வழி வகுக்கிறது.சிவகாசி ரயில்வே பீடர் ரோட்டில் இருந்து தலைமை தபால் நிலையம் செல்லும் ரோடு மிகவும் குறுகியதாக உள்ளது. இந்த ரோட்டில் வழியாகத்தான் நகருக்குள் வருகின்ற கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இதே ரோட்டைத்தான் கடந்து செல்கின்றனர். இதனால் இயல்பாகவே இந்த ரோட்டில் எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்திருப்பதோடு அதில் பாதிப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த குறுகிய ரோட்டில் நடுவே பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் டூவீலர்களே விலகிச் செல்ல முடியவில்லை. பெரிய வாகனங்கள் வந்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. லோடு ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் ரோட்டோரத்தில் உள்ள மின்கம்பங்களில் உரசி செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் அம்பேத்கர் மணி மண்டபத்திலிருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் குறுகிய ரோட்டிலும் நடுவில் பேரி கார்டு வைக்கப்பட்டுள்ளதால் அங்கும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது. சமீபத்தில் தலைமை தபால் நிலையம் ரோட்டில் வந்த லோடு வாகனம் விலகிச் செல்ல வழி இல்லாமல் மின்கம்பத்தை உரசியது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எனவே இப்பகுதியில் உள்ள பேரி கார்டுகளை அகற்ற வேண்டும். அல்லது இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோடுகளை அகலப்படுத்திய பின்பு பேரிகார்டு வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி