உள்ளூர் செய்திகள்

வண்டுகள் அழிப்பு

நரிக்குடி : நரிக்குடியில் 300 ஆண்டுகள் பழமையான சத்திரம், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.பல ஆண்டுகளாக கண்டும் காணாமல் விட்டு விட்டதால் கட்டடம் சேதம் அடைந்து, புதர் மண்டி, விஷ பூச்சிகள் தங்கும் இடமாக மாறியது. இதைத்தொடர்ந்து விஷ கதம்ப வண்டுகள் கூடு கட்டின. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் அடிக்கடி பறந்து மக்களை அச்சுறுத்தி வந்தன.அருகில் காய்கறி சந்தை, பஸ் ஸ்டாண்ட் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அப்பகுதியில் ஏராளமான வண்டுகள் சுற்றி திரிந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து திருச்சுழி தீயணைப்பு நிலையை அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் குழுவினர் நேற்று அங்கு கூடு கட்டி இருந்த விஷ கதம்ப வண்டுகளை தீ வைத்து அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை