உள்ளூர் செய்திகள்

சைக்கிள் போட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் 13, 15, 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் முதல் 3 இடங்களில் வந்த மாணவர்களுக்கு பரிசு தொகைக்கான செக் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன், அரசு துறை அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை