சைக்கிள் போட்டி
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது. சங்க தலைவர் கனகபெருமாள் தலைமை வகித்தார். செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். பொருளாளர் விக்னேஷ் வரவேற்றார். போட்டியை ரோட்டரி நிர்வாகிகள் அருணாசலம், நந்தகோபால், பால்சாமி துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். செண்பகதோப்பு ரோட்டில் நடந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். விழாவில் எலைட் சங்க நிர்வாகிகள், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.