பா.ஜ., ஆர்ப்பாட்டம்: 231 பேர் கைது
விருதுநகர்: சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ., அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம் செய்தபா.ஜ.,வினர் 231பேர் கைது செய்யப்பட்டனர்.விருதுநகர், திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் அந்தந்த மண்டல தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் நகர் பகுதியில் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மேற்கு மாவட்டம் சார்பில் ராஜபாளையத்தில் சரவண துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி உட்பட மாவட்டம் முழுவதும்12 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 231 பேர் கைது செய்யப்பட்டனர்.