கல்லுாரியில் ரத்ததான முகாம்
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில்நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லுாரி தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஷ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி கலந்து கொண்டனர். தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் மாணவர்களிடம் ரத்தம் பெறப்பட்டது. 110 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்க்கை ஈஸ்வரன், ஆதிமூலம், பேராசிரியர்கள் செய்தனர்.