உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மருத்துவக்கல்லுாரிக்கு உடல் தானம்

மருத்துவக்கல்லுாரிக்கு உடல் தானம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க., கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளராக இருப்பவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வினோத் அரவிந்தன். இவரின் தந்தை ஜீவானந்தம்64, உடல்நலமில்லாமல் நேற்று காலை 6:00 மணிக்கு மரணமடைந்தார். இவர் தனது உடலை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு தானமாக அளிக்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு ஜீவானந்தத்தின் உடல் தானமாக அளிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழை டீன் ஜெயசிங் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ