நுால் வெளியீட்டு விழா
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் மெஞ்ஞான குருகுல பரிபூரண சபை சார்பில், பாவா ஒரு ஞானக்களஞ்சியம் என்ற நூல் வெளியிட்டு விழா நடந்தது. இதில் நூலினை வெளியிட்டு குருமகான் பிரம்மஞானி ஐயன் முருகானந்தன் பேசியதாவது; ஞானம் உன்னதமானது, புனிதமானது, ரகசியமானது. அது அனைத்து மக்களிடமும் சென்றடைய வேண்டும். ஞானத்தை கஷ்டப்பட்டு தான் அடைய வேண்டும். நமது உடலில் அழியாத ஜீவன் உள்ளது. அதனை நாம் பக்குவப்படுத்த வேண்டும். எல்லா நாட்டிலும் மெய்ஞானம் பரவ வேண்டும் என்றார். சுகப்பிரியா குரூப் நிறுவனங்கள் தலைவர் ராமராசு முதல் பிரதியை வழங்கிட, அதனை வி.ஆர். எஸ். அரிசி ஆலை தலைவர் செந்தில் கண்ணன் பெற்றுக் கொண்டார். விழாவில் நகர் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.