உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை

கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை

ராஜபாளையம் : திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் - வெண்ணிலா தம்பதிக்கு 6, 7 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்த நிலையில், வெண்ணிலா இரு மகன்களையும் ராஜபாளையம் அருகே பன்னகரத்தில் உள்ள தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து உள்ளார். இருவரும் காப்பகத்தில் தங்கி, அருகில் உள்ள பள்ளியில் படித்தனர்.நேற்று காலை சிறுவன் சாய்சஞ்சீவை காணவில்லை. தேடியபோது, அப்பகுதி விவசாய கிணற்றில் இறந்த நிலையில் கிடந்தார். விசாரணையில், காப்பகத்தில் தங்கியுள்ள மனவளர்ச்சி குன்றிய நவீன், 22, சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி