உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசிக்கு குடிநீர் வழங்கும் குழாயில் உடைப்பு: வீணாகும் தண்ணீரால் அவதி

சிவகாசிக்கு குடிநீர் வழங்கும் குழாயில் உடைப்பு: வீணாகும் தண்ணீரால் அவதி

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் வனமூர்த்திலிங்கபுரம் அருகே சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.வெம்பக்கோட்டை அணையில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. இதற்காக வெம்பக்கோட்டையில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து விஜய கரிசல்குளம், வனமூர்த்தி லிங்கபுரம் கொங்கலாபுரம் வழியாக குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு வரப்படுகின்றது.இந்நிலையில் வனமூர்த்திலிங்கபுரம் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறி வீணாகி வருகின்றது. இதனால் சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. சிவகாசியில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யும் நிலையில் இது போன்று குழாய் உடைந்து தண்ணீர்வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.எனவே உடனடியாக சேதம் அடைந்த குழாயினை சரி செய்து குடிநீர்வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை