உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு பஸ்சில் உடைந்து விழுந்த படிக்கட்டுகள்

அரசு பஸ்சில் உடைந்து விழுந்த படிக்கட்டுகள்

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி குரண்டிக்கு வந்த அரசு டவுன் பஸ்சில் படிக்கட்டுகள் உடைந்து விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். காரியாபட்டி குரண்டிக்கு ஆவியூர் வழியாக மதுரையிலிருந்து அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வந்த டவுன் பஸ் குரண்டியில் பயணிகளை இறக்கி விட்டு, அங்கிருந்தவர்களை மதுரைக்கு ஏற்றினர். 60 க்கும் மேற்பட்டோர் ஏறியதும் புறப்பட்டது. அவனியாபுரம் சுடுகாடு அருகே சென்றது போது பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது. படியில் யாரும் நின்று செல்லாததால் விபரீதம் ஏற்பட வில்லை. இதையடுத்து மாற்று பஸ் வரவழைத்து பயணிகளை ஏற்றி அனுப்பினர். இது பயணிகளிடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியது. கண்டமான பஸ்களை சரிவர பராமரிக்காமல் பயன்படுத்தி வருவது பயணிகளின் உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தரமாக சீரமைத்து பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை