| ADDED : பிப் 07, 2024 12:25 AM
காரியாபட்டி : நரிக்குடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு முன் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யு., சார்பில் மத்திய பட்ஜெட்க்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்ஜெட் நகல் எரிக்கும் போராட்டம் நடந்தது.ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, செயலாளர் அழகேஸ்வரி, பொருளாளர் பொன்னுமயில் தலைமை வகித்தனர். சி.ஐ.டி.யு., சங்க ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.