மேலும் செய்திகள்
இருளில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அவதியில் பயணிகள்
08-Sep-2025
விருதுநகர் : விருதுநகர் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தை கடந்து சிவகாசி செல்லும் ரோட்டில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாப் தற்போது டூவீலர்களின் பார்க்கிங் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. விருதுநகரில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து சிவகாசி செல்லும் பஸ்கள் மேம்பாலத்தின் அருகே நின்று செல்வதற்காக பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டது. இதனால் சிவகாசி ரோட்டில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக பஸ்களில் சென்று வர முடிந்தது. ஆனால் தற்போது பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிற்பதற்கு இடமில்லாமல் டூவீலர்கள் நிறுத்திவிட்டு இங்கிருந்து பஸ்களில் ஏறி பயணம் செய்து வருகின்றனர். இதனால் பஸ் ஸ்டாப் டூவீலர்கள் பார்க்கிங் பகுதியாக மாறியுள்ளது. மேலும் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாத அளவிற்கு சில நேரங்களில் டூவீலர்களை நிறுத்தி வைத்து வருகின்றனர். எனவே சிவகாசி ரோட்டில் பஸ் ஸ்டாப்பில் டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமிப்பதை தடுத்து பயணிகள் சிரமமின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
08-Sep-2025