உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழந்தை நலக்குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

குழந்தை நலக்குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

விருதுநகர்; கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுவிற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித உடல் நலம்,கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றும், குழந்தைகள் தொடர்பான நலப்பணிகளில் 7 ஆண்டுகள் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அல்லது https://dsdcpimms.tn.gov.inஎன்ற தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். டிச. 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ