உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உயிர்மச் சான்று பெற அழைப்பு

உயிர்மச் சான்று பெற அழைப்பு

விருதுநகர்: விதை சான்று உதவி இயக்குனர் கோகிலாவின் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் சில பகுதிகளில் இயற்கை முறையில் குதிரைவாலி, சாமை, வரகு, திணை முதலிய சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், பழ மரங்கள் சாகுபடி செய்கின்றனர். இயற்கை எனும் உயிர்ம முறையில் செய்யும் இவர்கள் உயிர்மச் சான்று பெறாமலே விவசாயம் செய்கின்றனர்.இந்த சான்று இருந்தால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியம் கிடைக்கும். உயிர்ம முறை சான்று உள்ள விவசாய பொருட்களுக்கு மற்ற பொருட்களை காட்டிலும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல விலை கிடைக்கிறது. தமிழகத்தில் உயிர்மச்சான்றளிப்பு துறையால் தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தின் கீழ் உயிர்மச் சான்று பெற புதியதாக பதிவு செய்வதற்கு மட்டும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே உயிர்மசான்று பெற விரும்புவோர் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை