வயல்களுக்கு உயிர்ம சான்று பெற அழைப்பு
விருதுநகர்: விதைச்சான்று, உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் கோகிலா செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் குதிரை வாலி, சாமை, வரகு, திணை ஆகிய சிறுதானியங்கள், நெல் ரகங்கள், வாழை, மா, கொய்யா, சப்போட்டா ஆகிய பழ மரங்களை விவசாயிகள் பெரும்பாலும் உயிர்ம சான்றிதழ் பெறாமல் விவசாயம் செய்கின்றனர்.இச்சான்றிதழ் பெற்றால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் வழங்கும் ஊக்க மானியங்கள், சலுகைகளை பெற முடியும். இந்த விளை பொருட்களுக்கு உள், வெளிநாட்டில் நல்ல விலை கிடைக்கிறது.தமிழகத்தில் உயிர்மச்சான்றளிப்புத் துறையால் தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில் புதியதாக உயிர்மச்சான்று பெற பதிவு கட்டணம் விலக்கு அளிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம்.விவரங்களுக்கு விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள விதைச்சான்றளிப்பு, உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.