மேலும் செய்திகள்
ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு அழைப்பு
07-Feb-2026
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்துார், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, காரியாபட்டி ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எழுத்து, நேர்முகத் தேர்வுகளின் நடத்தப்படும். டிகிரி, எம்.எஸ்., ஆபீஸ்சில் 3 மாத சான்றிதழ் பெற்றவர் விண்ணப்பிக்கலாம். 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வட்டாரத்தின் எல்கை பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். டூவீலர் லைசென்ஸ் அவசியம். www.virudhunagar.nic.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிப். 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.
07-Feb-2026