மேலும் செய்திகள்
கல்வி உதவித்தொகை திட்ட விழிப்புணர்வு கூட்டம்
05-Oct-2024
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: இளம் சாதனையாளர்களுக்காக பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இதர பிற்படுத்தபட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம், இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக். 15. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் அக். 31. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவர்கள் OTR எண் பதிவு செய்து 2024--25 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தை புதுப்பித்து கொள்ளலாம், என்றார்.
05-Oct-2024