உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உழவர் சேவை மையம் அமைக்க அழைப்பு

உழவர் சேவை மையம் அமைக்க அழைப்பு

விருதுநகர்: வேளாண் இயக்குனர் சுமதி செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்களுக்கு உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு 15 உழவர் நல சேவை மையங்கள் துவங்கப்பட உளளன. இதன் மூலம் தொழில் முனைவோராக விரும்பும் வேளாண் பட்டதாரிகள் ரூ.10 லட்சம் அல்லது ரூ.20 லட்சத்தில் விதைகள், உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை மையம், நோய், பூச்சி மேலாண்மை, மதிப்புக் கூட்டு பொருட்கள் வேளாண் உயர் தொழில் நுட்பம், இதர வேளாண் சார்ந்த பிரிவுகளில் தொழில் துவங்கலாம். இதற்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் www.tnagrisnet.tn.gov.inஎன்ற அக்ரிஸ்நெட் வலைத்தளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம். அருகில் உள்ள வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை