உள்ளூர் செய்திகள்

வளாக நேர்காணல்

சிவகாசி: சாத்துார் மேட்டமலை கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லுாரியில் பயிற்சி மட்டும் வேலைவாய்ப்பு துறை, சென்னை புளு ஓசன் பர்சனல் அண்ட் அலைடு சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் வளாக நேர்காணல் நடந்தது.கல்லுாரி தலைவர் ராஜு, செயலாளர் முத்துக்குமார், முதல்வர் உஷா தேவி முன்னிலை வகித்தனர். புளு ஓசன் நிறுவனத்தின் பிரதிநிதியாளர் தேஜா நேர்காணல் செய்தார். கல்லுாரி இறுதி ஆண்டு படிக்கும் பல்வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர். நேர்காணலில் பங்கேற்ற 143 மாணவர்களில் 98 மாணவர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ