மாணவர்களுக்கு கஞ்சா : 4பேர் கைது
நரிக்குடி: நேற்று முன் தினம் முடுக்கன்குளம் அரசு பள்ளி அருகே நின்றிருந்த மதுரை பனங்காடி அபினேஷ் 25, கே.நெடுங்குளம் சூரிய பிரகாஷ் 22, கோவிலாங்குளம் முத்துராமன் 18, கல்யாணிபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரிடம் போலீசார் விசாரித்ததில், அபினேஷ் கஞ்சா சப்ளை செய்தது, அவற்றை மற்றவர்கள் மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது. 4 பேரையும் அ. முக்குளம் போலீசார் கைது செய்தனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.