கார்- - பஸ் மோதல்
விருதுநகர்: விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திருநெல்வேலி நோக்கி காரில் ராமலட்சுமி 37, அப்பாவுராஜ் 67, மனைவி சித்ரா 57, 10 வயது சிறுமி ஆகியோர் நேற்று முன்தினம் பட்டம்புதுார் விலக்கு அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்டதால் பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் கார் தலைகீழாக கவிழ்ந்து நால்வரும் காயமடைந்தனர். தினமலர் நாளிதழில் காரை ஓட்டியது ராமலட்சுமி என நேற்று செய்தி வெளியானது. போலீசாரின் விசாரணையில், காரை ஓட்டியது சித்ரா என தெரிந்தது. வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.