விருதுநகரில் காரில் தீ விபத்து..
விருதுநகர்: வெள்ளுரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் 29. இவரின் காரை விருதுநகரில் சர்வீஸ் சென்டரில் பழுது நீக்குவதற்காக கொடுத்துள்ளார். சர்வீஸ் சென்டர் பணியாளரான வேலுச்சாமி நகரைச் சேர்ந்த வேல்முருகன் 55, காரை விருதுநகர் நான்கு வழிச்சாலையில் புல்லலக்கோட்டை ரோடு அருகே சர்வீஸ் ரோட்டில் நேற்று மதியம் 3:00 மணிக்கு ஓட்டிச்சென்ற போது தீப்பிடித்தது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.