உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தகராறு 3 தி.மு.க., ம.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது வழக்கு

சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தகராறு 3 தி.மு.க., ம.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது வழக்கு

சிவகாசி:சிவகாசி மாநகராட்சியில் மார்ச் மாதம் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 3 தி.மு.க., ம.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். சிவகாசி மாநகராட்சியில் மார்ச் 18 ல் அவசரக் கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் நடந்தது. அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் கவுன்சிலர்கள் மேஜையை தள்ளி விட்டு, இரு பிரிவாக பிரிந்து தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து 6வது வார்டு தி.மு.க., கவுன் சிலர் ஸ்ரீநிகா, மேயருடன் விவாதம் செய்த போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேஜையை தள்ளி விட்டதாக அளித்த புகாரில் கவுன்சிலர்கள் தி.மு.க.,வை சேர்ந்த ஜெயனுலாபுதீன், சர வணன், ம.தி.மு.க.,வை சேர்ந்த சீனிவாச ராகவன் மீது நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஜெயனுலா புதீன், கவுன்சில் கூட்டத்தில் தீர்மானத்தை வாசிக்க விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஸ்ரீநிகாவிடம் கேட்ட போது, ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரின் பேரில் ஸ்ரீநிகா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ