உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 15 நாட்களில் ரூ.4.94 லட்சம் வசூல்; 3 தீயணைப்புத்துறை வீரர்கள் மீது வழக்கு

15 நாட்களில் ரூ.4.94 லட்சம் வசூல்; 3 தீயணைப்புத்துறை வீரர்கள் மீது வழக்கு

விருதுநகர்: தீபாவளிக்காக நோட்டு போட்டு 15 நாட்களில் ரூ.4.94 லட்சம் வசூலித்த விருதுநகர் தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 3 பேரை ரூ.59 ஆயிரம் ரொக்கத்துடன் பிடித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்கின்றனர். விருதுநகர் தீயணைப்புத்துறையை சேர்ந்த ஹரிசந்திரன், நவநீத கிருஷ்ணன். ஆகியோர் நேற்று இரவு 7:30 மணிக்கு டூவீலரில் குடியிருப்புக்கு சென்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இவர்கள் விருதுநகர் கடைகள், நிறுவனங்களில் தீபாவளிக்கு வசூல் செய்ததும், இதில் அதே துறையை சேர்ந்த வினோத்திற்கும் தொடர்பு இருப்பதும் தெரிந்தது. வினோத்தை சோதனை செய்ததில் மூவரிடம் இருந்தும் ரூ.59 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வினோத் வங்கி கணக்கில் ரூ.3.79 லட்சம் இருப்பதை கண்டறிந்தனர். தீபாவளிக்காக தனியாக நோட்டு போட்டு செப்.29ல் இருந்து நேற்று வரை மொத்தம் ரூ.4.94 லட்சம் வசூலித்தது தெரிந்தது. மீதமுள்ள பணத்தை ஆன்லைன் மூலமாக பெற்று செலவழித்தாக தெரிவித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது: தீபாவளி வசூலை யார் செய்து கொடுப்பது என தீயணைப்புத்துறையில் ஏலம் நடந்துள்ளது. இதற்காக போடப்பட்ட தனி நோட்டில் எந்த கடைகள், நிறுவனங்களிடம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது. அந்த தொகை யார், யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் தொடர் விசாரணை நடக்கும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை