ரயில்வே கேட் கீப்பருடன் தகராறு; முதியவர் மீது வழக்கு
விருதுநகர்; விருதுநகர் அருகே துலுக்கப்பட்டியில் ரயில்வே கேட் கீப்பராக பணிபுரிபவர் பர்வேஷ் குமார். இவர் ஜூலை 13 இரவு 10:20 மணிக்கு துாத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து செல்வதற்காக ரயில்வே கேட்டை அடைத்தார்.அப்போது டூவீலர் ஓட்டி வந்த சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து 61, கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தார். துாத்துக்குடி ரயில்வே போலீசார் காளிமுத்து மீது வழக்கு பதிந்தனர்.