உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூமாபட்டியில் தொடரும் வெறிநாய்க்கடி மாடு, கன்றுகளும் பாதிப்பு

கூமாபட்டியில் தொடரும் வெறிநாய்க்கடி மாடு, கன்றுகளும் பாதிப்பு

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் மூன்றாவது நாளாக நேற்றும் வெறிநாய் ஒன்று 5 பேரை கடித்தது. மேலும் மாடுகள், கன்றுகளையும் கடித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூமாபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று ராமசாமியாபுரம், பஸ் ஸ்டாண்ட், தைக்கா பஜார், யாதவர் தெரு, மேல தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் 16க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயப்படுத்தியது. இவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர்.நேற்று முன்தினம் காலையில் 9 பேரை நாய் கடித்து, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறி நாயை விரட்டி பிடிக்க மக்களும், பேரூராட்சி நிர்வாகமும் தேடியும் நாய் சிக்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை 3 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 5 பேரையும் மாடுகள், கன்று குட்டிகளையும் கடித்து காயப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதில் நான்கு பேர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டார். வெறி நாய் பிடிபடாததால் கூமாபட்டி மக்கள் தெருக்களில் நடமாட அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை