மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஊர்வலம்
18-Apr-2025
விருதுநகர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் நடந்த டூவீலர் பிரசார இயக்கம் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.*சாத்துார் முக்கு ராந்தல் வந்த இரு சக்கர வாகன பிரச்சார குழுவிற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் ராஜேஸ்வரன், ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட இணைச் செயலாளர் கோபால் முன்னாள் மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.இதன் பின்னர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக மதுரை பஸ் ஸ்டாப் வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர் சங்கம் மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் முனியாண்டி, செல்வராஜ் மற்றும் ஓய்வு சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் அய்யம்மாள் பேசினார்கள். ஊர்வலத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் பலர் கலந்து கொண்டனர்.
18-Apr-2025